தீபிகா படுகோனின் நடிப்பில் உருவான.. “சாபாக்” இது ஒரு உண்மை சம்பவம்…

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் சாபாக். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனின் நடிப்பில் இன்று வெளிவந்த படம் தான் சாபாக். இந்த திரைப்படத்தை பற்றி அதன் இயக்குனர் மேக்னா குல்சார் ஒரு பேட்டியில் கூறியது பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. தீபிகா படுகோன் இந்த படத்தில் அற்புதமாக நடத்தவுள்ளார். லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ளேன் என்றார். இந்த படத்தை படமாக்க பல பிரச்சினைகள் சந்தித்ததாகவும் பல தடைகளை தாண்டி தற்போது இந்த படம் வெளிவந்து இருப்பதாவும் கூ‌றினா‌ர்.

இந்த படத்தில் தீபிகாவுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம், மேலும் இந்த படத்தில் அவருக்கு போடபட்ட மேக்கப் ஒரு பராஸ்தடிக் மேக்கப் என்று குறிப்பிட்டார் இயக்குனர் மேக்னா குல்சார். இந்த மேக்கப்பை போடவே இரண்டு மூன்று மணிநேரம் ஆகும். அதுவும் இந்த படம ஏப்ரல் மே மாதத்தில் படமாக்கப்பட்டது அப்போது மிகவும் கடுமையான வெயில் மேக்கப் போட்டவுடனே வியர்த்து விடும் அதற்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் வேறு இந்த படம் பெரும் சவாலாகவே இருந்தது என்றும் கூறினார்.

மேலும் பல படப்பிடிப்பு டெல்லி தெருக்களில் நடந்த வேண்டியது இருந்தது, நாங்கள் அங்கு சென்று படமெடுக்கும் பொழுது பலரும் வேலைக்கு கூட செல்லாமல் எங்கள் ஷூட்டிங்யை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.இவர்களை மற்றும் படக்குழுவினரை ஒருங்கிணைந்து சென்றது சற்று கடினமாக இருந்தது என்று தெரிவித்தார்.

தீபிகாவிற்கு போடபட்ட பராஸ்தடிக் மேக்கப் சற்றே கடினம் ஆனாலும் அவர் மிகவும் அருமையாக நடித்துள்ளார். அந்த மேக்கப்போட அவர் எப்படி நடிச்சாங்கனுதெரியல அவ்வளவு அழகாக நடிச்சி இருக்காங்க என்று வெகுவாக பாராட்டினார். பல கஷ்டங்களை சந்தித்து இப்படம் தற்போது வெளிவந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார் இயக்குனர் மேக்னா குல்சார் .

Advertisements

Next Post

'கர்ணன்'படத்தில் தனுஷின் தோற்றம்.... இணையத்தில் வைரல் ....

Sat Jan 11 , 2020
கர்ணன் படத்தில் தனுஷின் தோற்றம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘அசுரன்’ படத்தை அடுத்து தனுஷ் நடித்துள்ள பாட்டாஸ் படம் 16 ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜின் படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். […]

Actress HD Images

Advertisements