தன்னை பற்றி வெளியான வதந்திகள் குறித்து ‘பிகில்’ பட நடிகை மறுப்பு..!

 தன்னைக் குறித்து வெளியான வதந்திக்கு நடிகை இந்துஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.மேயாத மான் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் இந்துஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் தற்போது நன்றாக நடிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் இந்துஜா.

இந்துஜாவுக்கு நிறைய பட வாய்ப்பு வருகின்றன. ஆனால் அவர் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், கமர்ஷியல் படங்களையே தான் விரும்புவதாகவும், விருது படங்களில் நடிக்க தயாராக இல்லை என கூறுவதாகவும் ஒரு நாளிதழில் செய்தி வெளியானது ஆனால் இந்தச் செய்தியை இந்துஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ” ஊடகங்கள் மிகவும் வலிமையானவை. அவை தான் சினிமாவின் முதுகெலும்பு என நான் நம்புகிறேன். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் உண்மை என்று அப்பாவி மக்கள் நம்புகிறார்கள்.

எனவே ஏதோ எழுத வேண்டுமே என பேருக்காக எழுதாதீர்கள். சினிமாவை பைத்தியக்காரத்தனமாக காதலிப்பவள் நான். நீங்கள் சொன்னது போல மோசமான ஒரு விஷயத்தை நான் சொன்னதே இல்லை. வார்த்தைகள் அதிகம் காயப்படுத்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

தலைவர் 168 ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Tue Dec 10 , 2019
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’தலைவர் 168’ படத்தின் நாயகியாக நடிகை மீனா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக எஜமான், வீரா மற்றும் முத்து ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை […]
%d bloggers like this: