நடிகை ஜோதிகா-வின் “பொன்மகள் வந்தாள்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள் மட்டுமே நீண்ட நாட்கள் நீடித்திருக்கமுடியும். அதில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த ஜோதிகா பின்னர் தொடர்ச்சியாக விஜய் , சூர்யா , அஜித் , விக்ரம் என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 2000ம் காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.அதனை அடுத்து சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் நீண்ட இடைவெளியிக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் நாச்சியார் , காற்றின் மொழி , என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதையடுத்து தற்போது மீண்டும் கணவர் சூர்யாவே தயாரிப்பில் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்து வருகிறார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைதுள்ளார். இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வழக்கறிஞராக ஜோதிகா நடிக்கும் இப்படம் வருகிற மார்ச் 27ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

பெண்களே இல்லாத படம் "பன்றிக்கு நன்றி சொல்லி" ஆண்கள் மட்டும் ..!! காரணம்?

Tue Mar 3 , 2020
பன்றிக்கு நன்றி சொல்லி என்ற பெயரில் விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படத்தில் பெண்களே நடிக்கவில்லை என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். புதையலைத் தேடி செல்லும் கௌபாய் வகைப் படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலம். தமிழில் அந்த வகைப் படங்களில் அதிகமாக நடித்தது ஜெய்சங்கர்தான். அதன் பின்னர் சிம்பு தேவன் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற கௌபாய் படத்தை இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் […]
%d bloggers like this: