நடிகர் ‘தனுஷ்’ மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகி வரும் “கர்ணன்” படத்தில்… இணைந்த லட்சுமி பிரியா!


தனுஷ் உடன் ‘கர்ணன்' படத்தில் இணைந்த லட்சுமி பிரியா!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடிகை லட்சுமி பிரியா இணைந்துள்ளார். ரிச்சி, மாயா உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகை லட்சுமிப்ரியா,  குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.  இவர் நடித்த லக்‌ஷ்மி குறும்படம் பல தளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் விவாதத்தையும் உருவாக்கியது.

இதையடுத்து சிகை பட இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கும் பாக்ஸி படத்தில் நாயகியாகவும், நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் தான் நடித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லட்சுமி பிரியா.

கர்ணன் திரைப்படம் தனுஷின் 41-வது திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் லால், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அசுரன் படத்தைத் தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தையும் வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

Advertisements

Next Post

கருப்பு நிற உடையில் முகத்தில் சிரிப்புடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்...

Thu Jan 16 , 2020
கோகினுர் என்ற மலையாள படம் முலம் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பின் கன்னடத்தில் நடித்து தான் அனைவருக்கும் தெரிந்தார். கன்னடத்தில் இவர் அறிமுகமான யூ டர்ன் திரைப்படம் அங்கு மிகப் பெரிய வெற்றி பெற்றது. பின் அங்கே நடித்து கொண்டு இருந்த ஷ்ரத்தா,பின்னர் தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்து அவ்வருடத்தின் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல […]
%d bloggers like this: