படுக்கைக்கு அழைத்தனர்.. வெறுப்பில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன்.. பிரபல நடிகை வேதனை..!

பட வாய்ப்பு வழங்க முன்னணி இயக்குனர்கள் சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை மஞ்சரி பட்நிஸ் தெரிவித்துள்ளார். பரோட் ஹவுஸ், ஜீனா இசிகா நாம் ஹேய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்திருப்பவர் நடிகை மஞ்சரி பட்நிஸ். தமிழில் மறைந்த இயக்குனர் ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர் இயக்கிய முத்திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் சக்தி எனும் படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மஞ்சரியிடம், சக்தி படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் ஏன் நடிக்கவில்லை என கேட்டனர். அப்போது அவர், “சக்தி படம் பெரிய ஹிட்டானது. அதன் பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.சக்தி படத்திற்கு பிறகான சம்பவங்கள் எனது மன நிலையை மிகவும் பாதித்தது. நான் சாதாரண பெண். எனக்கு சினிமா பின்னணி கிடையாது. எனவே கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன். சினிமா பின்னணி இல்லாமல் இந்த துறையில் ஜெயிப்பது மிகவும் கஷ்டமான காரியம்”. என்றார் மஞ்சரி.

மஞ்சரி பட்நிசின் இந்த பகீர் குற்றச்சாட்டு டோலிவுட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டு யார் மீதும் மஞ்சரி குற்றஞ்சாட்டவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பது குறித்து தெலுங்கு மீடியாக்களும், ரசிகர்களும் புலனாய்வு செய்து வருகிறார்கள்.

பொதுவாக திரைத்துறையில் காஸ்டிக் கவுச் புகார்கள் நிறைய இருக்கின்றன. ஸ்ரீ ரெட்டி, சின்மயி, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் - மனம் திறந்த நித்யா மேனன்..!

Wed Dec 11 , 2019
கோலிவுட்டில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு  படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘த அயர்ன் லேடி’யிலும் நடிக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அப்போது, தான் எதிர்பாராத விதமாக தான் […]

Actress HD Images

%d bloggers like this: