அண்ணாத்த படத்திற்காக ஒல்லியாக மாறிய நடிகை மீனா..புகைப்படங்கள் வைரல்..!!

அண்ணாத்த படத்தில் நடித்து வரும் மீனா தனது உடல் எடையை அதிகம் குறைத்துள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் மீனா நடிக்கிறார். இதற்காக அவர் தன் உடல் எடையை அதிகம் குறைத்துள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.

View this post on Instagram

💕💕

A post shared by Meena Sagar (@meenasagar16) on

அன்புள்ள ரஜினிகாந்த் படம் துவங்கி இதற்கு முன்பு ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளார் மீனா. அண்ணாத்த படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அவருக்கு படத்தில் மிக முக்கிய ரோல் இருக்கும் என கூறப்படுகிறது.

View this post on Instagram

It's not about Perfect.. It's about Effort ❤

A post shared by Meena Sagar (@meenasagar16) on

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவா இயக்கி வரும் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு உள்ளது. ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அண்ணன்-தங்கை பாசத்தை மையப்படுத்தி தான் முழு கதையும் இருக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி நயன்தாராவும் நடிக்கிறார்.

View this post on Instagram

The Pongala gang..friends like family 💖💖

A post shared by Meena Sagar (@meenasagar16) on

இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் புனேவில் நடைபெறவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் அச்சம் இருப்பதால் அந்த முடிவை கைவிட்டு ஹைதராபாத்தில் செட் போட்டு படமாக்க உள்ளனர்.


Advertisements

Next Post

Oppo Smart TV | முன்னணி நிறுவனம் களமிறக்கும் ஸ்மார்ட் டிவி.! எப்போது? என்ன நிறுவனம்?

Wed Mar 11 , 2020
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அருமையான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றதான் கூறவேண்டும். மேலும் அன்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, பின்பு இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலும் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் ஒப்போ என்கோ ஃபிரீ டி.டபுள்யூ.எஸ். இயர்பட்ஸ்-ஐ அன்மையில் அறிமுகம் […]
%d bloggers like this: