நடிகை “நயன்தாரா” தனது காதலருடன் கோயில் கோயிலாக சுற்றி வருகின்றனர்.. கல்யாண பிரார்த்தனையா?

பாலாஜி இயக்கி, நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஐசரி கணேஷ் இதனை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியின் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நயன்தாரா தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் நாகர்கோவில் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக நயன்தாரா, தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று பரிகார பூஜைகளைச் செய்தார். அதன் பின்னர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கும் இருவரும் இணைந்து சென்று சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இன்று நாகர்கோவிலில் இருக்கும் சுசீந்திரம் கோயிலுக்கு நடிகை நயன்தாரா தனது காதலருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

அடுத்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், ஏற்கெனவே நயன்தாராவின் இரு காதல்களும் திருமணத்தில் முடியாமல் தோல்வியில் முடிவுற்றதால், திருமணத்திற்கு முன்பாக பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு இருவரும் ஜோடியாக சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

மஞ்சள் நிற ஆடையில் நடிகை "இந்துஜா" பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்..!

Tue Dec 17 , 2019
இந்துஜா டிவிட்டரில் புதிய புகைபடங்களை வெளியிட்டு உள்ளார். மஞ்சள் நிறம் ஆடையில் சும்மா ஸ்டைலாக போஸ் கொடுத்ததை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் மஞ்சள் நிற அழகே, மஞ்சள் காட்டு மைனா என்று ஏகத்திற்கும் புகழ்ந்து வருகின்றனர். மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா. அந்த திரைப்படத்தில் வைபவ்ற்கு தங்கையாக நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரளவிற்கு பேசப்படும் முகமானார். இதையடுத்து மெர்க்குரியில் நடித்து இருப்பார் இது அவருக்கு […]
%d bloggers like this: