அரசியல் கட்சி தொடங்கும் திட்டம்… ஒரே ‘டிவீட்டில்’ ஒட்டுமொத்த ஆர்மியை குஷியாக்கிய ஓவியா..!

அரசியல் கட்சி ஆரம்பிப்பது பற்றி நடிகை ஓவியா விளக்கம் அளித்துள்ளார். களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், மதயானைக் கூட்டம் என சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. பிக் பாஸ் முதல் சீசன் தான் ஓவியாவின் வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஓவியாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஆர்மிகள் எல்லாம் தொடங்கப்பட்டன.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பப்ளிசிட்டியை ஓவியா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இருப்பினும் ஓவியாவின் ரசிகர் வட்டம் அப்படியே தான் இருக்கிறது.

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவிடம், ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டது. அதுகுறித்து அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். அந்த கேள்வி ஓவியாவிற்கு கடும் கோபத்தை உருவாக்கியது.

அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “அரசியல் சாராத நடிகர், நடிகைகளிடம் அரசியல் குறித்து கேள்வி கேட்பதை செய்தியாளர்கள் தவிர்க்க வேண்டும். இந்த கேள்விகளை பொது மக்களிடம் கேட்டால் எதிர்பாராத பதில்கள் கிடைக்கும்.” என்று பதிவிட்டு, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஓவியாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர், “நீங்களே ஒரு புது கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே” என கூறினார். அவருக்கு பதில் அளித்துள்ள ஓவியா, “எனக்கு தான் ஆர்மி இருக்கிறதே”, என குறிப்பிட்டுள்ளார். இதனால் ஓவியா ஆர்மி செம குஷியாகிவிட்டது.

Advertisements

fogpriya

Next Post

ரஜினி பட பாடல் காப்பியா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்கள்..!

Thu Nov 28 , 2019
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ’தர்பார்’ படத்தின் சிங்கிள் பாடலான ’சும்மா கிழி’ என்ற பாடல் இன்று மாலை வெளிவந்து இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தப் பாடல் நடன இயக்குனர் கலா மாஸ்டர் அடிக்கடி பயன்படுத்தும் ’சும்மா கிழி’ என்ற வார்த்தையில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட பாடல் என்று ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். […]
%d bloggers like this: