டேட்டிங் செய்ய வயது தடையில்லை….நடிகை “ரைசா வில்சன்” நெட்டிசன்களுக்கு பதில்…

டேட்டிங் செய்ய வயது தடையில்லை - நெட்டிசனுக்கு ரைசா பதில்!

டேட்டிங் செய்ய வயது தடையில்லை என்று நடிகை ரைசா வில்சன் கூறியுள்ளார். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ரைஸா வில்சன். தனுஷ் நடித்த வேலையில்லா பட்டாதாரி 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் ரசிகர்களைப் பெற்ற ரைஸா அந்நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்தார்.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து பாலா இயக்கத்தில் ‘வர்மா’ படத்தில் ரைஸா நடித்திருந்தார். ஆனால் அப்படம் வெளியாகவில்லை. மீண்டும் ஹரிஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த ரைஸா, அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் தனுசு ராசி நேயர்களே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்த ரைசா, தமிழக மக்களை மகிழ்விப்பதற்காக ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் செல்லத் தயார் என்று ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட் அப்படத்தின் விளம்பரத்துக்காக ரைசா ஜாலியாக செய்த ட்வீட் என்று பலரும் கூறினர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ரைசா வில்சனிடம், உங்களை விட 7 வயது குறைந்தவருடன் டேட்டிங் செல்வீர்களா என்ற கேள்வியை நெட்டிசன் ஒருவர் முன் வைத்தார். அதற்கு பதிலளித்த டேட்டிங் செய்ய வயது தடையில்லை. யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்யத் தயார் என்று ரைசா கூறினார்.

Advertisements

Next Post

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் படமாகிறதா?

Wed Jan 15 , 2020
திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி […]
Advertisements