நடிக்க வந்த கொஞ்ச காலத்திலேயே ரூ.250 கோடிக்கு சொத்து..!! ஐ.டி. ரெய்டில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா..!!

நடிகை நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரூ.250 கோடிக்கு சொத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானதையடுத்து பிசியானார். பின்னர் டியர் காம்ரேட் படம் மூலம் தமிழுக்கும் வந்தார்.

மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சைலேரு நீக்கெவ்வரு என்ற தெலுங்கு படம் கடந்த 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இவர், தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துவருகிறார். இதை சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இவரது வீடு கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள விராஜ்பேட்டில் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.

சோதனை நடந்தபோது, நடிகை ரஷ்மிகா வீட்டில் இல்லை. அவர் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார். விசாரணையில், ரஷ்மிகா விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத பணம் வீட்டில் இருந்தது என்றும் அதை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் செய்தி வெளியாயின.

இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன்படி பெங்களூரில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு தனது தந்தை மதன் மற்றும் ஆடிட்டருடன் திங்கட்கிழமை சென்ற ராஷ்மிகா, தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இந்நிலையில், ராஷ்மிகா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு ரூ.250 கோடி சொத்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறுகிய காலத்தில் இத்தனை கோடி சொத்துகள் வந்தது எப்படி என்பது பற்றி அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்த உள்ளதாகவும் கன்னட மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisements

Next Post

"வெண்ணிலா கபடி குழு" பட இயக்குநர் மீது வாகனம் மோதி விபத்து...

Fri Jan 24 , 2020
இன்று காலையில் நடைபயிற்சி சென்ற பிரபல இயக்குநர் சுசீந்திரன் மீது வாகனம் மோதியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’வெண்ணிலா கபடிக் குழு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தவர் சுசீந்தரன். அதன்பிறகு அவர் ’பாண்டியநாடு’, ’நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் ஆனார். இந்த நிலையில், இன்று […]
%d bloggers like this: