சங்கத்தமிழன் நாயகிகள் இருவரும்க்கும் இன்னைக்குத்தான் பிறந்தநாள்..!

சென்னை: விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்திருந்தனர். சங்கத்தமிழன் நாயகிகள் இருவரும் இன்று ஒரே நாளில் தங்களின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதில், வேடிக்கை என்னவென்றால், நிவேதா பெத்துராஜை விட ராஷி கண்ணா ஒரு வருஷம் பெரியவர் என்பது தான்.

ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படம் தமிழில் நிவேதா பெத்துராஜுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இன்றும் பல இளைஞர்களின் காலர் ட்யூன்களாகவும், தங்களது காதலிகளை கொஞ்சும் பாடலாகவும் அடியே அழகே பாடல் இருந்து வருகிறது.

ரஜினி, நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் முதல் முறையாக பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தனர். சங்கத்தமிழன் நாயகிகள் இருவருக்கும் இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நிவேதா பெத்துராஜின் பிறந்த நாளை முன்னிட்டு சோனி மியூசிக் செளத் சண்டக்காரி நீதான் பாடலை டெடிகேட் செய்துள்ளது.

Advertisements

fogpriya

Next Post

பட்டாஸ் படத்தின் பரபரப்பான அறிவிப்பு..!

Sun Dec 1 , 2019
நடிகர் தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்களான பட்டாஸ் மற்றும் சுருளி ஆகிய திரைப்படங்கள் வெகு விரைவில் ரிலீசாக உள்ளன இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சற்றுமுன் […]

Actress HD Images

%d bloggers like this: