நடிகை “ரிச்சா கங்கோபாத்யா” தன் திருமணம் பற்றி விளக்கம்..!

தனுஷ் பட நடிகை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து டிவிட்டரில் விளக்கமளித்திருக்கிறார். நடிகை ரிச்சா கங்கோபாத்யா தெலுங்கு படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடித்தார். தனுஷுடன் மயக்கம் என்ன படத்திலும் சிம்புவுடன் ஒஸ்தி என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் ரிச்சா.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரிச்சா கங்கோபாத்யாவுக்கு ரகசிய திருமணம் நடந்தாகிவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் ரிச்சா திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்களும் வெளியானது.ரிச்சா கடைசியாக தெலுங்கில் பாய் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அமெரிக்காவுக்கு சென்ற அவர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

தற்போது ரகசிய திருமணம் குறித்த தகவலால் ஷாக்கான அவர் அதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கல்யாணம் முடிந்த மூன்று மாதங்கள் முடிந்தது. நாங்கள் இருவரும் அமெரிக்காவில் கிரேட் ஸ்கூல் கிளாஸ்மேட்ஸ்.

எங்கள் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சில செய்திகளில் குறிப்பிட்டது போல ரகசிய திருமணம் இல்லை. நான் திரையுலகை விட்டு 6 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் என் மேல் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்கள் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

"சன்னி லியோனை" யார் என்று கேட்ட நபர்..!!

Sun Dec 22 , 2019
நடிகை சன்னி லியோனிடம் பெயர் என்ன, ஊர் எது எனக் கேட்கும் நபரின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.சன்னி லியோன் சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தனது கால்பந்து திறன்களைக் காட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். 38 வயதான அவர் முன்னதாக ஆபாச நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் பட ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவிருக்கும் ‘வீரமாதேவி’ எனும் படத்திலும் நடித்துள்ளார். […]
%d bloggers like this: