ஆர்யா-வை பார்த்தாலே என் மனது வலிக்கிறது… சாயிஷா-வின் வேதனை டுவிட்..!!

நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக தான் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவது குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அவரது வயிற்றில் ஒருவர் கட்டையால் அடிக்கிறார். கட்டையால் அடி வாங்கிக்கொண்டு சிரித்தபடியே ஆர்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா ’ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு கடினமாக உழைக்கும் உங்களைப் பார்த்தால் என் மனது வலிக்கிறது என்று டுவிட் செய்துள்ளார். சாயிஷாவின் இந்த ட்விட்டர் போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் “சல்பேட்டா” என்ற திரைப்படத்தில் ஆர்யா நடிக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்தில் அவர் குத்துச்சண்டை வீரராக நடிக்க இருப்பதால் அந்த கேரக்டருக்காக தயார்படுத்தும் வகையில் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் அவர் உடற்பயிற்சி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்த “டெடி” என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

"மாஸ்டர்" படம் நாயகி மாளவிகா-வுக்கு குவியும் பட வாய்ப்புகள்...

Wed Mar 4 , 2020
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு சில தமிழ் திரைப்படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது. குறிப்பாக சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள “அருவா” படத்தில் மாளவிகா மோகனன் தான் நாயகி என்று கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் நடிக்க மாளவிகாவுடன் […]
%d bloggers like this: