நடிகை “ஸ்ரேயா” லண்டன் போலிஸாரால் திடீர் கைது..!

தமிழ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற நடிகை ஸ்ரேயா அங்குள்ள போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுர படத்தின் இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி எனும் படம் உருவாகி வருகிறது. இதில்  நடிகர் விமல் மற்றும் ஸ்ரேயா நடிக்கின்றனர்.  இந்த படத்தின் ஷூட்டிங் லண்டன் விமான நிலையம் அருகே நடைபெற்றது. அப்போது படப்பிடிப்புத் தளத்தில் இருந்த ஸ்ரேயே திடீரெனக் காணாமல் போனார். இதையடுத்து படக்குழு அவரைத் தேட போலிஸார் அவரைத் துப்பாக்கி முனையில் கைதுசெய்து வைத்துள்ளனர்.

அதுபற்றி விசாரிக்கையில் ஸ்ரேயே அனுமதி மறுக்கப்பட்ட இடத்துக்குள் சென்றுவிட்டதாகவும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததாலும் அவரைக் கைது செய்துள்ளதாகப் போலிஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின் பாஸ்போர்ட் மற்றும் படப்பிடிப்பு அனுமதி சீட்டு ஆகியவற்றைக் காட்டி படக்குழு அவரை மீட்டுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

தமிழக ஸ்டைலில் தடல்புடல் விருந்து..ஜப்பானில் களைக்கட்டிய "ரஜினிகாந்த்" பிறந்தநாள்..! HBD thalaiva

Thu Dec 12 , 2019
ஜப்பானில் தமிழக ஸ்டைலில் தடல்புடல் விருந்துடன் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் நேற்று முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பிறந்த நாள் ட்ரீட்டாக நேற்றே தலைவர் 168 படத்தின் பூஜை போடப்பட்டது. இதனையே […]
%d bloggers like this: