எந்த முட்டாள் இந்த வதந்தியை கிளப்பியது?.. என்னை எரிச்சல் படுத்தாதீர்கள்….எஸ்.ஜே.சூர்யா ஆவேசம்..!!

நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடித்த ’மான்ஸ்டர்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிப்படமானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானிசங்கர் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் ’பொம்மை’இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

அது என்னவெனில் பிரியா பவானி சங்கர் இடம் எஸ்ஜே சூர்யா தனது காதலை தெரிவித்ததாகவும் ஆனால் அதற்கு பிரியா பவானி சங்கர் மறுப்பு தெரிவித்ததாகவும் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தியால் அதிர்ச்சி அடைந்த எஸ்ஜே சூர்யா இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். எந்த முட்டாள் இதுபோன்ற வதந்தி பரப்பினார்கள் என்று தெரியவில்லை. பிரியா பவானி சங்கர் ஒரு நல்ல நடிகை. அவர் என்னுடன் நட்புடன் பழகி வருகிறார். தயவுசெய்து இதுபோன்ற உண்மையில்லாத வதந்திகளை பரப்பி எரிச்சல் படுத்தாதீர்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். எஸ்ஜே சூர்யாவின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Advertisements

Next Post

நடிகர் 'தனுஷ்' மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகி வரும் "கர்ணன்" படத்தில்... இணைந்த லட்சுமி பிரியா!

Thu Jan 16 , 2020
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடிகை லட்சுமி பிரியா இணைந்துள்ளார். ரிச்சி, மாயா உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகை லட்சுமிப்ரியா,  குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.  இவர் நடித்த லக்‌ஷ்மி குறும்படம் பல தளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் விவாதத்தையும் உருவாக்கியது. இதையடுத்து சிகை பட இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கும் பாக்ஸி படத்தில் நாயகியாகவும், நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது […]
%d bloggers like this: