சன்டிவி “அழகு” சீரியல் நாயகி சுதா மீது சர்ச்சை… நடிகை “ஸ்ரீரெட்டி” பரபரப்பு புகார்..

தனது விலையுயர்ந்த காரை சேதப்படுத்தியதாக சீரியல் மேலாளர் உள்ளிட்டோர் மீது காவல்நிலையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகாரளித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி வாயை திறக்கிறார் என்றாலே அது பிரச்சனையாகதான் இருக்கும். படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தமிழ், தெலுங்கு திரையை சேர்ந்த பலரும் தன்னுடன் உடலுறவு கொண்டதாக குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பினார். பலர் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திவிட்டு சாப்பாடு கூட வாங்கிக்கொடுக்காமல் பட்டினி போட்டதாகவும் தெரிவித்து பிரளயத்தை ஏற்படுத்தினார். தமிழ் சினிமா பிரபலங்களான இயக்குநர் ஏஆர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் பெயரையும் குறிப்பிட்டு அதிர வைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் தெலுங்கு திரைத்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியே பிரபலமாகிவிட்டார். முன்னணி நடிகர்கள் மூத்த நடிகர்கள் என்ற பாராபட்சமே இல்லாமல் அனைவரின் மீதும் குற்றச்சாட்டை கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி. தெலுங்கில் முன்னணி நடிகர்கள் மீது இவர் கூறிய குற்றச்சாட்டால் அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

அங்கும் அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறார். அவர் குடியிருக்கும் தெருவில் காரோ அல்லது இரு சக்கர வாகனங்களோ நிறுத்தப்படக்கூடாது. ஒரு வேளை தப்பி தவறி நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். கண்டமேனிக்கு திட்டித்தீர்த்துவிடுவார் ஸ்ரீரெட்டி. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் ஸ்ரீரெட்டி இருக்கும் பகுதி வாகனங்களை நிறுத்தாதீர்கள் என எச்சரிக்கை போர்டு கூட வைக்கப்பட்டது.

ஸ்ரீரெட்டியின் வீடு உள்ள அன்பு நகர் பகுதியில் ஷூட்டிங் ஹவுஸ்கள் இருப்பதால் அங்கு அடிக்கடி வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் நாள் தோறும் ஒரு பிரச்சனை எழுந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி, தனது வீட்டு வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆடி காரை அப்பகுதியில் சின்னத்திரை தொடர்களில் படப்பிடிப்பு நடத்தி வரும் சிலர் சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சீரியல் ஒன்றில் தயாரிப்பு மேலாளராக இருக்கும் சந்தோஷ் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, அழகு சீரியலில் சுதாவாக நடித்து வரும் ஸ்ருதி ராஜ் மற்றும் சன்டிவி சீரியல் நடிகை நடிகர்கள் மற்றும் தமன்னா பாட்டியா வெப் சீரிஸை சேர்ந்தவர்களும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய சிவப்பு நிற ஆடிக்காரின் ஸ்க்ராட்ச் செய்யப்பட்டிருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்திருக்கிறார்.

Advertisements

Next Post

கருப்பு நிற உடையில் கையில் குழந்தை அருகில் செல்ல நாய்... என நடிகை "எமி ஜாக்சன்" ஸ்பெஷல் ஃபோட்டோ...

Thu Jan 2 , 2020
கடந்த 2019 ஆம் வருடம், என்னவொரு சிறந்த வருடம் என ஆச்சரியமாகத் தெரிவித்துள்ளார் நடிகை எமி ஜாக்சன். ஆர்யாவின் மதராசப்பட்டினம், விக்ரமின் தாண்டவம், தனுஷின் தங்க மகன், விக்ரமின் ஐ, ரஜினிகாந்தின் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். பின்னர் கர்ப்பிணி எமிக்கும், அவரது காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் வீடியோ வெளியாகின. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் […]

Actress HD Images

%d bloggers like this: