சிவன் மேல் உள்ள காதலால்… அகோரியாக மாறிய “ஶ்ரீரெட்டி” வைரலாகும் வீடியோ…

நடிகை ஶ்ரீரெட்டி சிவ பெருமான் பக்தை போல் வேடமிட்டு வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலர் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி. நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்.

தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். தெலுங்கு திரை உலகில் இவர் போட்ட பெரும் பிரச்சனையை கிளப்பயி நிலையில் ஸ்ரீரெட்டி ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நடிகை ரெட்டி புதிய வீடியோ ஒன்றை யூ டியூப்பில் வெளியிட்டு இருக்கிறார்.

சிவன் மேல் உள்ள காதலால் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளதாக கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் சிவபெருமான் போலவும் சிவ பக்தராகவும் வேடம் அணிந்து நடித்துள்ளார். சில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களி வைரலாக பரவி வருகிறது.


Advertisements

Next Post

ஜெயலலிதா போல் இல்லையே: ‘தலைவி’ செகண்ட் லுக்கை கிண்டலடித்த நெட்டிசன்கள்..!!

Mon Feb 24 , 2020
பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். மேலும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வரும் இந்த படம் வரும் ஜூன் 26-ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஜெயலலிதா குறித்த […]
%d bloggers like this: