கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை கிளப்பிய சர்ச்சை நடிகை “ஸ்ரீரெட்டி”..!! பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு மிரட்டுறாங்க..

நடிகை ஸ்ரீரெட்டி பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக பகீர் குற்றச்சாட்டுக்களை கூறினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பவில்லை.

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைத்துறை அதிர்ச்சியில் உறைந்து கிடந்தது. எப்போது யாரை பற்றி என்ன சொல்லுவாரோ பீதியில் இருந்தனர் பிரபலங்கள் பலர். தன்னை பயன்படுத்திவிட்டு வாய்ப்பு அளிக்கவில்லை எனக் கூறி ஹைதராபாத்தில் நட்ட நடு ரோட்டில் மேலாடையை அவிழ்த்து போட்டு அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். அவரது இந்த போராட்டம் தேசிய அளவில் வைரலானது. அதன் பிறகு அங்கு சிலரால் விடுக்கப்பட்ட மிரட்டலால் உயிருக்கு அஞ்சி சென்னைக்கு குடி பெயர்ந்தார். சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் வசித்து வரும் அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதனால் நொந்து போன அப்பகுதி மக்கள், இது ஸ்ரீரெட்டி வசிக்கும் பகுதி எச்சரிக்கை என போர்டு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதில் சீரியல் ஷுட் நடத்திய அழகு சீரியல் குழுவினர் தனது காரை சேதப்படுத்தியதாக கூறி புகார் அளித்தார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து பவன் கல்யாணையும் சாடி வருகிறார் ஸ்ரீரெட்டி.

அண்மையில் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீதும் அவதூறு கூறினார் ஸ்ரீரெட்டி. இதையடுத்து கராத்தே கல்யாணியும், ராகேஷும் சைபர் கிரைம் போலீசில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தனர். தங்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வருவதாக புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் ஸ்ரீரெட்டி பேசிய ஆபாச வீடியோ ஆதாரத்தையும் வழங்கினர். இதையடுத்து ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் “தெலுங்கு திரையுலகில் துணை நடிகையான கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் என்னைப் பற்றி கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

தான் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவளிப்பதால், நடிகர் பவன் கல்யாணின் ஆதரவாளர்களான இருவரும் இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். எனது ஆண் நண்பர்கள் குறித்தும், அவர்களுடன் தான் பழகும் விதம் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்கள்.

மேலும் நான் வீடு வாங்கியது, கார் வாங்கியது எப்படி? எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள் உள்ளனர்? என்பது பற்றியெல்லாம் அவதூறு தகவல்களை வெளியிடுகிறார்கள். அது எனது தனிப்பட்ட வி‌‌ஷயம். அவர்கள், என் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று பேசுகின்றனர் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

Advertisements

Next Post

ஒரு மனசாட்சி வேண்டாமா..!!பலே திருடன்... 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே? எப்படி தெரியுமா?

Thu Feb 27 , 2020
Advertisements
%d bloggers like this: