போன டிசம்பர்-ல கல்யாணம், இந்த டிசம்பர்-ல டைவர்ஸ்… அறிவித்த பிரபல நடிகை..!

நடிகை ஸ்வேதா பாசு, தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். தமிழில், உதயா நடித்த ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், கருணாஸ் நடித்த சந்தமாமா உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு பிரசாத். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இவரும் இவரது நீண்ட நாள் நண்பரான இந்திப் பட இயக்குனர் ரோகித் மிட்டலும் காதலித்து வந்தனர். கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.இவர்கள் திருமணம் செய்துகொள்ள இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது

இந்நிலையில், தனது திருமணத்தை முறித்துக்கொண்டதாக ஸ்வேதா பாசு பிரசாத் தெரிவித்துள்ளார். இதுபற்றி சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர், பல மாத யோசனைக்குப் பிறகு இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். இம்முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்துள்ளோம். எல்லா புத்தகங்களையும் அட்டை டூ அட்டை படித்துவிட முடியாது. அதற்கு புத்தகம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. ஈடுசெய்ய முடியாத சில நினைவுகளுக்கும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி ரோகித். இனிமையான வாழ்க்கை உன் முன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஸ்வேதா. ஐதராபாத்தில் பாலியல் தொழில் செய்ததாகக் கைது செய்யப்பட்டவர், ஸ்வேதா பாசு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

இயக்குனர் அட்லி-யின் அடுத்த பட ஹீரோ குறித்த தகவல்..!

Wed Dec 11 , 2019
இயக்குனர் அட்லி இயக்கிய ’ராஜாராணி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து விஜய்யின் மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கினார்அவர் இயக்கிய தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களும் நல்ல வசூலைக் கொடுத்த போதிலும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்றும் அதிக பட்ஜெட்டில் அவர் படம் எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதுஇந்த நிலையில் அட்லியை வைத்து வேறு எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க கூடாது என்று மறைமுக ரெக்கார்டு […]

Actress HD Images

Advertisements