மீ டூ “தனுஶ்ரீ” மீண்டும் ரெடி..!

இந்தி நடிகர் நானா படேகர் மீது, மீ டு புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வருகிறார். தமிழில், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை தனுஶ்ரீ தத்தா. இவர், ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் குடும்பத்தோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த மீ டூ புகார், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நானா படேகர், தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினி நடித்த காலா படங்களில் நடித்தவர். இதையடுத்து இந்தி நடிகர், நடிகைகள் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பின்னர் நானா படேகர் மீது, மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் தனுஶ்ரீ புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லாததால், விசாரணையை தொடரமுடியவில்லை என கூறி முடித்துவிட்டனர். இதை எதிர்த்து மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் தனுஶ்ரீ தத்தா. இந்நிலையில் மீண்டும் நடிப்பதற்கு அவருக்கு அழைப்புகள் வந்தன. இதனால் தினமும் ஸ்விம்மிங், சைக்கிளிங் செய்துவருகிறார். இதன் மூலம் உடல் எடையை குறைத்து ஃபிட் ஆகியுள்ளார். யோகா, தியானம், ஆன்மிக பயிற்சிகளுக்கும் சென்று வருகிறாராம்.

சினிமாவில் மீண்டும் நடிப்பதற்குத்தானா இது? என்று கேட்டால், இதையெல்லாம் செய்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. அதுபற்றி யூகித்துக்கொண்டே இருப்போம். உண்மையில் என்ன நடக்கும் என்று தெரியும்போது, அது ஆச்சரியத்தை அளிக்கட்டும் என்கிறார் தத்துவமாக. ஆனால், பெரிய நிறுவனம் ஒன்று வெப் சீரிஸில் நடிக்கவும் சில படங்களில் நடிக்கவும் அவருக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அதனால்தான் இதையெல்லாம் அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

"தளபதி 64" படத்தில் இணைந்த இரண்டு வில்லன் நடிகர்கள்..!

Mon Dec 16 , 2019
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது சில நட்சத்திரங்கள் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே மெயின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் அதனை அடுத்து கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூந்தாஸ் என்ற நடிகரும் வில்லன் கேரக்டர்களில் […]

Actress HD Images

%d bloggers like this: