விஷாலுடன் ஜோடி போட ரெடியான துருவ நட்சத்திரம் ஹீரோயின்..!

சென்னை: துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஷால், அடுத்ததாக ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நாயகியாக நடித்துள்ள ரித்து வர்மா ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டோலிவுட் நடிகையான ரித்து வர்மா நடிப்பில் வெளியான பெலி சூப்புலு படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்த இயக்குநர் ஆனந்த் ஷங்கர் அரிமா நம்பி, இருமுகன் என இரு படங்களை இயக்கியுள்ளார். இரண்டு படங்களும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது படத்தை விஷாலை வைத்து ஆனந்த் ஷங்கர் இன்னும் பிரம்மாண்டமாக இயக்கவுள்ளார்.

சுந்தர். சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆக்‌ஷன் படம் எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் லண்டனில் உருவாகி வரும் துப்பறிவாளன் படத்தில் தற்போது தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார் விஷால். அவர் அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் சக்ரா எனும் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்கள் முடிந்த பிறகு ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

டோலிவுட் நடிகை ரித்தி வர்மா தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திலும் ரித்து நடித்து வருகிறார். இந்த இரு படங்களை தொடர்ந்து தமிழில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தாமியுள்ளாராம்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ரித்து வர்மா நடிக்கவுள்ள புதிய படம் வரும் பிப்ரவரி மாதம் மலேசியாவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

மனைவிக்கு விலையுயர்ந்த பரிசளித்த நடிகர் அக்‌ஷய்குமார்..!

Sun Dec 15 , 2019
நடிகர் அக்‌ஷய் குமார் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை கரீனா கபூர் உடன் இணைந்து பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கரீனா கபூருக்கு பரிசாக வெங்காய தோடு வழங்கப்பட்டது. அந்த வெங்காய தோடை கரீனா கபூர் பெரிதாக விரும்ப வில்லை. இதனால் அக்‌ஷய் தனது மனைவிக்காக அதை கேட்டு வாங்கி வந்துள்ளார். இதுகுறித்து அக்‌ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘எனது கணவர் […]
%d bloggers like this: