சண்டை காட்சிகளில் அசத்தும் “த்ரிஷா”- ‘ராங்கி’ டீசர் வெளியீடு..!

காதல் கதையில் உருகிய ’96’ திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவின் ராங்கி என்ற திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ராங்கி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா இசையமைக்கிறார்.

கடந்த மே மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போதுபடத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில், த்ரிஷா துப்பாக்கிகளுடன் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். டீசரின் இறுதியில் ராங்கி திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

சிறார் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு - காவல்துறை தகவல்..!

Mon Dec 9 , 2019
தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பி வரும் 3 குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் அல்லது அதனை இணையதளத்தில் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்வதும் குற்றம் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி எம்.ரவி புதிய தலைமுறைக்கு தெரிவித்திருந்தார். மேலும், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்திருந்தார். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை […]

Actress HD Images

%d bloggers like this: