சொல்றது ஒன்று … செய்றது ஒன்று… பிரபல நடிகரின் படத்தில் இருந்து வெளியேறிய த்ரிஷா..!!

த்ரிஷா தான் நடித்துவந்த தெலுங்கு படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். ஆரம்பத்தில் சொன்னது எதுவம் நடக்கவில்லை என படக்குழு மீதான அதிருப்தியில் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார் அவர். நடிகை த்ரிஷா அடுத்து தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். கொரட்டல சிவா இயக்கிவந்த அந்த படத்திற்கு ஆச்சார்யா என பெயரிட்டிருக்கின்றனர்.

கடந்த வாரம் ஷூட்டிங்கிலும் திரிஷா பங்கேற்றார் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார் த்ரிஷா. இதுபற்றி அவர் கோபத்துடன் ட்விட்டரில் பேசியுள்ளார்.

“சில நேரங்களில் ஆரம்பத்தில் சொல்வது ஒன்று பின்னர் நடப்பது ஒன்றாக இருக்கிறது. படக்குழுவுடன் கருத்து வேறுபாடு காரணமாக நான் சிரஞ்சீவி சார் படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். என அன்பான தெலுங்கு ரசிகர்களுக்கு – உங்களை வேறு ஒரு படம் மூமாக சந்திக்கிறேன்” என திரிஷா ட்விட் செய்துள்ளார்.

த்ரிஷா திடீரென விலகியதால் அவருக்கு பதிலாக வேறு சில முன்னணி நடிகைகளுடன் பேச்சு வார்த்தையில் உள்ளனர் என கூறப்படுகிறது. த்ரிஷாவுக்கு பதில் காஜல் அகர்வாலை நடிக்கவைக்க இயக்குனர் தீவிரமாக இருக்கிறாராம்.

த்ரிஷா கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். பரமபதம் விளையாட்டு, பொன்னியின் செல்வன், ராக்கி, கர்ஜனை என பல படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. பரமபதம் விளையாட்டு சென்று மாத இறுதியிலேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்து பொன்னியின் செல்வன் படத்தினை அதிகம் நம்பியிருக்கிறார் த்ரிஷா. அந்த படம் தனது கெரியரில் பெரிய மைல்கல் படமாக அமையும் என எதிர்பார்க்கிறார் அவர்.

Advertisements

Next Post

‘பிகில்’ பாண்டியம்மா இந்திரஜா ஷங்கர் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்.. குவியும் லைக்ஸ்..!!

Sat Mar 14 , 2020
‘சர்கார்’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்து கடந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘பிகில்’. விஜய், அப்பா – மகன் என டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். ஸ்போர்ட்ஸ் – ஆக்ஷன் ஜானரைக் கொண்ட இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், […]
%d bloggers like this: