“யாஷிகா”-க்கு எம்ஜிஆர் – சிவாஜி விருது -இது உங்களுக்கே அநியாமா தெரியலையா..? திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 

அந்த வகையில் கடைசியாக இவர் யோகி பாபுவுடன் சேர்ந்து “ஜாம்பி” படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாக பெரிதாக வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. அப்படியிருக்க தற்போது இந்த படத்தில் நடித்ததற்காக யாஷிக்காவிற்கு எம்ஜிஆர் – சிவாஜி விருது கொடுத்து கௌரவித்துள்ளனர்.

அந்த விருதுடன் யாஷிகா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.  இதனை கண்ட நெட்டிசன்ஸ்..ஏன்டா! இது உங்களுக்கே அநியாமா தெரியலையா..? எந்த விருதை யாருக்கு கொடுக்கவேண்டும் என்ற வெவஸ்தை கூடவா இல்லை. இந்த விருதுக்கான மரியாதையே போய்டுச்சு என்று கூறி கலாய்த்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Advertisements

Next Post

கோப்ரா அப்டேட்: நடிகர் விக்ரமின் 'கோப்ரா' படம் தாமதமாவது ஏன்? என்ன சொல்கிறார்கள் படக்குழுவினர்....

Tue Jan 21 , 2020
நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ’கோப்ரா’ என்ற படத்தின் படப்பிடிப்பு ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு விக்ரம் செல்வதற்கு முன்னரே முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின்படி இந்த படம் கால தாமதமாகி கொண்டே வருகிறது. இந்த படத்தில் விக்ரம் 15க்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடித்து வருவதால் ஒவ்வொரு கேரக்டருக்கும் காலதாமதம் ஆவதால் இந்த படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தவில்லை என கூறப்படுகிறது. எனவே […]
%d bloggers like this: