பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் கமல்…உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து எழுபது, எண்பதுகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளனர். அனைத்து படங்களும் வசூல் ரீதியாக சாதனை படைத்தவை. இவர்கள் இருவரையும் வைத்து கே. பாலசந்தர், பாரதிராஜா, போன்ற இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

அதன்பின், இருவரும் முன்னணி கதாநாயகர்கள் ஆன பின், இணைந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
இந்நிலையில், கமல்ஹாசனின் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்திற்கான பூஜை மார்ச் 5 ஆம் தேதி என தகவல்கள் வெளியாகிறது. அதனால் ரஜினி, கமல் ஆகிய இரு சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisements

Next Post

அஜித்துக்கு டான்ஸ் வராது.. ஆனால் இதில் அவரை அடிச்சிக்க ஆளே கிடையாது..ரகசியம் உடைத்த நடன இயக்குனர்..!!

Wed Feb 26 , 2020
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பரதநாட்டியத்தில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் என்றால் அது சிவசங்கர் என்பவர்தான். கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு தல அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு என்ற படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்த அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த இந்தப் […]
%d bloggers like this: