‘பொன்னியின் செல்வனு’க்காக படகு ஓட்டி பயிற்சி செய்த “ஐஸ்வர்யா லட்சுமி”

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்காகப் படகு ஓட்டி பயிற்சி செய்திருக்கிறார், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, லால், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

இதில், ஐஸ்வர்யா லட்சுமியும் இணைந்துள்ளார். இவர், விஷாலுடன் ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் மலையாளத்தில் நிவின் பாலி, டோவினோ தாமஸ், பகத் பாசில், ஆசிப் அலி ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர், பொன்னியின் செல்வன் படத்துக்காக, படகு ஓட்டி பயிற்சிப் பெற்றத் தகவல் தெரிய வந்துள்ளது.இதுபற்றி படக்குழு கூறும்போது, முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. படத்தில், கடலில் படகு ஓட்டும் காட்சி அவருக்கு இருக்கிறது. இதற்காக அவர் கேரள கடற்பகுதியில் படகு ஓட்டி பயிற்சிப் பெற்றார். இப்போது தாய்லாந்தில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் நடித்து வருகிறார் என்று தெரிவித்தனர்.

Advertisements

fogpriya

Next Post

"அனிருத்"-தை கேள்வி கேட்ட ரசிகர்கள்..!ட்ரெண்டான -#AskAnirudh

Sat Dec 14 , 2019
ட்விட்டரில் #Ask என்ற ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் தங்கள் ரசிகர்கள் தங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்குவார்கள். இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிரபலங்கள் பதில் தருவார்கள். சமீப காலமாக ட்ரெண்டாகி உள்ள இந்த ஹேஷ்டேகில் இதற்கு முன் ஷாரூக்கான், ஆயூஷ்மான் குரானா போன்றோர் தங்கள் ரசிகர்களோடு பேசினர். இன்று திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் #AskAnirudh  என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது , […]
%d bloggers like this: