நானி-க்கு நாயகியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சிவா நிர்வானா இயக்கத்தில் நானி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நானி – சிவா நிர்வானா கூட்டணியில் வெளியான படம் ‘நின்னு கோரி’. நிவேதா தாமஸ், ஆதி உள்ளிட்ட பலர் நானியுடன் நடித்துள்ள இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழில் அதர்வா இந்தப் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவா நிர்வானா இயக்கிய ‘மஜிலி’ திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நாக சைதன்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவா நிர்வானா இயக்கவுள்ள அடுத்த படத்திலும் நானியே நடிக்க ஒப்பந்தமானார்.

இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. (டிசம்பர் 3) இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘டக் ஜெகதீஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நானிக்கு நாயகிகளாக ரீத்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தமன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

சாஹூ மற்றும் ஹரிஷ் இருவரும் ‘டக் ஜெகதீஷ்’ படத்தைத் தயாரிக்கின்றனர். படக்குழு 2020-ம் ஆண்டு ஜனவரியில் ஷூட்டிங் செல்ல ஆயத்தமாகி வருகிறது.

Advertisements

fogpriya

Next Post

ஊடகங்களைச் சாடிய "ரகுல் ப்ரீத் சிங்" வீடு குறித்த சர்ச்சை..!

Fri Dec 6 , 2019
வீடு குறித்த சர்ச்சை செய்திக்கு ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது இந்தியில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சில காலங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் புதிய வீடு ஒன்றை ரகுல் ப்ரீத் சிங் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தற்போது இந்தியில் நடித்து வருவதால், ஹைதராபாத் வீட்டை விற்றுவிட்டதாகவும், பெங்களூருவில் புதிய […]
%d bloggers like this: