திரௌபதி படத்திற்கு வாழ்த்துக் கூறினாரா அஜித்… பரவி வரும் வதந்தியால் பரபரப்பு…இயக்னர் ஜி. மோகன் என்ன கூறுகிறார்….

சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் டிரைலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த படத்தை வெற்றிப் படமாக்கியே தீருவோம் என்று இன்னொரு பிரிவினர் கங்கணம் கட்டிக்கொண்டு, படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாழ்த்து போஸ்டர்களை அடித்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த படம் வெளிவந்தாலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜி.மோகன் அவர்களை அழைத்து அஜித் பாராட்டியதாகவும், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பொருந்துவது போல் ஜி.மோகன் மற்றும் அஜித் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரௌபதி படத்தின் இயக்னர் ஜி. மோகன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வதந்திகளை நம்பாதீர் திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே என்று பதிவு செய்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisements

Next Post

தனது டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு விட்டதாக மீரா மிதுன் தகவல்.. ரவுண்ட் கட்டும் ரசிகர்கள்...

Tue Jan 14 , 2020
ஹேக் செய்யப்பட்ட தனது சமூக வலைத்தளக் கணக்குகள் மீட்கப்பட்டுவிட்டதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்திமாறி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் அப்படியொரு பொருத்தம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், உடன் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாகக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். […]
%d bloggers like this: