‘வலிமை’ படத்தின் நாயகி இந்த ஹீரோயினா… அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்…!!

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிப்ரவரி முதல் வாரம் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பிலும் நாயகி கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால் நாயகி யார் என்பது குறித்த முடிவை இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க அஜித்தை சுற்றியே மையமாகக் கொண்டிருப்பதால் நாயகிக்கு பெரிதாக வேலை இருக்காது என்றும் அதனால் நாயகி இன்னும் யார் என்பதை படக்குழுவினர் முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க யாமி கவுதம், இலியானா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அனேகமாக கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் பைரவா மற்றும் சர்கார் படங்களில் நடித்தபோது அஜித் ரசிகர்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்தனர். இந்த நிலையில் அவரே வலிமையின் நாயகியாக அறிவிக்கப்பட்டால் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

"குஷ்பு" சொன்ன ரகசியம்.. செப்டம்பர் வந்தா எனக்கு இத்தனை வயசுன்னா நம்புவீங்களா..!! வியந்த ரசிகர்கள் !!

Wed Jan 22 , 2020
நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிகழ்வும் உண்டு. அவரின் ஸ்டைலை ஃபாபோவ் பண்ண பெண்களும் உண்டு. வயதாகிவிட்டாலும் தற்போது சின்னத்திரை சீரியலான லக்‌ஷ்மி ஸ்டோரில் நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர்.சி ஐ திருமணம் முடித்து தன் இருமகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அதே வேளையில் அரசியலும் […]

Actress HD Images

%d bloggers like this: