வலிமை படப்பிடிப்பின் போது பைக்கில் இருந்து விழுந்து தல “அஜித்” காயம்…கவலையில் ரசிகர்கள்!!

சென்னையில் நடந்த வலிமை படப்பிடிப்பின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாம். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. அங்கு ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கினார் வினோத். இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

சென்னையில் அஜித் சூப்பர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்பொழுது அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாம். இருப்பினும் அஜித் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். ஐரோப்பாவில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளை ஷூட் செய்ய உள்ளார் வினோத். அந்த காட்சிகளில் அஜித் நிச்சயம் டூப் போட விட மாட்டார். அவருக்கு மீண்டும் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்பது தான் ரசிகர்களின் கவலை.

இதற்கிடையே அஜித்தால் வலிமை படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் வினோத் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் ஒரு தகவல் தீயாக பரவியது. விசாரித்துப் பார்த்ததில் அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. படப்பிடிப்பு என்னவோ விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அஜித்தின் ஹீரோயின் யார், வில்லன் யார் என்று எந்த தகவலையும் வெளியிடுவேனா என்று அடம் பிடிக்கிறார் வினோத். போனி கபூர் தயாரிக்கும் வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

cooker-ல சோறு வைத்தது குத்தமா!! VJ மணிமேகலையின் "cook with Comali" அலப்பறைகள்..

Wed Feb 19 , 2020
Advertisements
%d bloggers like this: