வலிமை படத்தில் ஒரு தல இல்லையாம்.. இரண்டு தலயாம்..!

வலிமை படத்தில் அஜீத் இரண்டு கெட்டப்பில் வருகிறாராம். அதுதான் இப்போது லேட்டஸ்ட் செய்தி. அஜீத் ரசிகர்கள் அடுத்து ஆவலுடன் எதிர்பார்த்துள்ள படம் வலிமை. தல இதில் எப்படி அதகளம் செய்யப் போகிறார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் படத்தில் அஜீத் 2 கெட்டப்பில் வருவதாக பேச்சு அடிபடுகிறது. அதற்கேற்ப ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஷார்ட் கட்டோடு, இறக்கிய மீசையுடன் ஒரு அஜீத், இன்னொரு கெட்டப்பில் ஒரு அஜீத்துமாக உள்ளனர். எனவே தல இப்படத்தில் 2 கெட்டப்போடு நடிப்பது உறுதியாகியுள்ளது. ஒரு தல வந்தாலே தியேட்டர்கள் தூள் பறக்கும்.. இதில் இரட்டைத் தலையோடு வருகிறார் அஜீத். பட்டையைக் கிளப்பும் என நம்பலாம்.

ரஜினிக்கே போட்டியாக ஒரு படமா.. ஆச்சரியமா இருக்குல்ல.. ஆனா வரப் போகுதாம் பாஸ். பட்டாஸ் படம் ஜனவரி 26ம் தேதி வெளி வரும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த தேதியில் முத்துச் செல்லப்பன் இயக்கியுள்ள பொன் மாணிக்கவேல் படமும் ரிலீஸாகும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சற்று முன்னதாக ஜனவரி 15ம் தேதியே இந்தப் படம் வெளியாகலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

அதாவது சூப்பர் ஸ்டார் படத்துடன் பொன் மாணிக்கவேலும் இணைந்து வெளியாகலாம் என்று சொல்கிறார்கள். அப்படி நடக்குமா நடந்தால் பட்டையைக் கிளப்புமா என்பது பெரும் எதிர்பார்ப்பாகும்.

Advertisements

fogpriya

Next Post

வெளுத்து கட்டிய விராட் கோலி..!

Tue Dec 3 , 2019
கடந்த சில வருடங்களாக சைவ உணவிற்கு மாறியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, தான் அசைவம் சாப்பிட்டபோது, எடுத்துக் கொண்ட உணவு குறித்து மனம் திறந்து பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கடுமையான சைவ டயட்டை பின்பற்றி வருகிறார். இதன்மூலம் தனது சாதனைகளை எட்டிப்பிடிப்பது அவருக்கு எளிதாக உள்ளது. கடந்த 2017ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரட்டை சதத்தை விளாசிய விராட், அதையடுத்து சிக்கன் […]
%d bloggers like this: