அஜித்தின் “வலிமை” படத்தில் இணையும் நடிகை..!

தல அஜித் நடிக்கவுள்ள ’வலிமை’ திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததேஇந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வை இயக்குனர் வினோத் கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவே தெரிகிறது. அஜித் ஜோடியாக நயன்தாராவும் இன்னொரு முக்கிய கேரக்டர்களில் அருண் விஜய்யும் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி விரைவில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்து விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது

அதே போல் இந்த படத்தில் யோகி பாபு காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறதுஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 60 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் இந்த 60 நாட்களில் கிட்டத்தட்ட பாதி படத்திற்கு மேலான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

"டாக்டர்" படத்திலிருந்து கவின் நீக்கம் ? பரபரப்பு தகவல்..!

Sat Dec 7 , 2019
சிவகார்த்திகேயன் நடிப்பில் ’கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பூஜை நடை பெற்றாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த படத்தை முடித்த […]
%d bloggers like this: