அஜித்துக்கு டான்ஸ் வராது.. ஆனால் இதில் அவரை அடிச்சிக்க ஆளே கிடையாது..ரகசியம் உடைத்த நடன இயக்குனர்..!!

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பரதநாட்டியத்தில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் என்றால் அது சிவசங்கர் என்பவர்தான். கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பெயர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு தல அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு என்ற படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்த அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. வரலாறு படத்தில் தல அஜித் பரதநாட்டிய கலைஞராக நடித்திருப்பார். முன்னணி நடிகர்கள் அனைவரும் செய்ய தயங்கும் கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்து பெயர் பெற்றார். அந்த கதாபாத்திரத்திற்கு முழுக்க முழுக்க பயிற்சி அளித்தது நடன இயக்குனர் சிவசங்கர் தானாம்.

தல அஜித் பெண் போன்று நளினமாக நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு தல அஜீத்துக்கு பயிற்சி அளித்த சிவசங்கர், தல அஜித் சிவசங்கரை பற்றி, இந்த கதாபாத்திரத்தை விளக்க உங்களை விட்டால் ஆளில்லை என பெருமையாக கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் தல அஜித்துக்கு நடனம் சுத்தமாக வரவில்லை என்றாலும் சொல்லுவதை கவனித்து திறமையாக செய்வதில் கைதேர்ந்தவர் என்றும் தல அஜித்தை பற்றி கூறியுள்ளார். மேலும் தல அஜித் அப்பா, இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் கலக்கிய வரலாறு படம் முதலில் காட்பாதர் என்ற பெயரில் உருவாகியது. மேலும் இந்த படத்தில் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் நடிக்க இருந்ததாகவும் இறுதியில்தான் தல அஜித்துக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

"கங்குலியின்" வாழ்க்கை வரலாறு படமாகிறதா!!

Wed Feb 26 , 2020
முன்னதாக கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதே போல் கபில் தேவ் வாழ்க்கை வரலாற்றான “83” உருவாக்கத்தில் உள்ளது. மேலும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோரது படங்களும் தயாராகி வருகிறது. இதன் வரிசையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் […]
%d bloggers like this: