ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண் யார் ? ‘பிரியங்கா சோப்ரா’-க்கு எத்தனையாவது இடம்?

ஆசியாவின் கவர்ச்சிக்கரமான பெண்ணாக, பாலிவுட் நடிகை ஆலியா பட் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற நாளிதழ் ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் யார் என்று வருடம்தோறும் வாக்கெடுப்பு நடத்தி பட்டியல் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் இளம் ஹீரோயின் ஆலியா பட், இந்த ஆண்டின் கவர்ச்சிக்கரமான ஆசிய பெண் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் டாப் ஹீரோயினான தீபிகா படுகோன், பத்து வருடங்களுக்கும் மேலாக கவர்ச்சியாக திகழும் பெண் என தேர்வாகியுள்ளார்.இதுபற்றி ஆலியா பட் கூறும்போது, உண்மையான அழகு என்பது நாம் பார்ப்பதற்கு அப்பால் உள்ளது என்றே எப்போதும் நம்புகிறேன். அதுதான் உண்மையில் கணக்கிடப்படும். வயதாகும்போது, நம் தோற்றங்களும் மாறும், ஆனால் நல்ல மனம், எப்போதும் அழகாகவே வைத்திருக்கும், அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நடிகை எனபதைத்தாண்டி, நவீன யுக பெண் சக்தியின் சின்னமாக ஆலியா இருக்கிறார் என்று ஈஸ்டர்ன் ஐ நிறுவனரும், ஆசிரியருமான அஸ்ஜத் நஸிர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த தீபிகா படுகோன், இந்தாண்டில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளார். ஆனால் பத்தாண்டுகள் கணக்கெடுப்பில் அவர் தனது கிரீடத்தைத் தக்க வைத்துக்கொண்டதாக நஸிர் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா 10 வது இடத்திலும் ஐஸ்வர்யா ராய் 39 வது இடத்திலும் உள்ளனர். பத்தாண்டுகள் லிஸ்டில், பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

Advertisements

fogpriya

Next Post

சீரியல் நடிகை "ஜெயஸ்ரீ" தீபாவளி பார்ட்டியை யாருடன் கொண்டாடினார்?பிக்பாஸ் பிரபலம் விளக்கம்..!

Fri Dec 13 , 2019
நடிகை ஜெயஸ்ரீ தீபாவளி பார்ட்டியை மகாலட்சுமியின் கணவருடன்தான் கொண்டாடினாரா என்பது குறித்த தகவலை பிக்பாஸ் பிரபல நடிகை அம்பலப்படுத்தியிருக்கிறார்.சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் குடும்பப் பிரச்சனைதான் இப்போது தமிழ் சின்னத்திரை உலகின் ஹாட் டாப்பிக். தனது கணவரான ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டார் நடிகை ஜெயஸ்ரீ. தன்னை அடித்து துன்புறுத்துவதாக வெளியான புகாரை தொடர்ந்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.பின்னர் ஜாமினில் வெளியே […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: