அம்மாவானர் ஆல்யா மானசா…பொது மேடையில் அறிவித்த கணவர் சஞ்சீவ்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். 
 கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.  இந்நிலையிக் சமீபத்தில் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சியில் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர். பொது மேடையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக  இருப்பதாக அறிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை அழைத்து ஆரவாரம் செய்தனர். எனவே கூடிய விரைவில் இந்த தம்பதியின் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கவிருக்கிறது.

Advertisements

fogpriya

Next Post

சட்டை பட்டனை போடாம செம்ம செக்ஸி போஸ்… இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சாக்‌ஷி அகர்வால் புகைப்படம்!

Tue Nov 26 , 2019
சென்னை: பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான சாக்‌ஷி அகர்வாலுக்கு, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனால், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைப்பதில்லை. தோழியாகவும், வில்லியாகவும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த பாராட்டுக்களை பெற்ற சாக்‌ஷி அகர்வால், சமீப காலமாக ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கலங்கடித்து […]
%d bloggers like this: