“அசுரன்” தெலுங்கு ரீமேக்கில் அமலாபால்..!!

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா என்ற படத்தில் நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.  இந்நிலையில், அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கேரக்டரில் பிரியாமணி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக திருநெல்வேலியில் நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்தில் நடிகை அமலாபாலும் இணைந்துள்ளார். இவர், தனுஷை காதலிப்பவராக நடித்த அம்மு அபிராமி கேரக்டரில் நடித்து வருகிறார்.

Advertisements

Next Post

வாங்கிய விருதை திருப்பிக் கொடுத்த சேரன்... இதுதான் காரணமா?

Mon Feb 3 , 2020
பிக்பாஸ் 3 மூலம் மக்களிடம் நல்ல அறிமுகமான இயக்குனர் சேரன் தான் நடித்திருந்த படம் ஒன்றை விமர்சனம் செய்யாததால் தனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பி அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் எதார்த்தமான திரைப்படங்களை எடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த இயக்குனர் சேரன் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் தொடர் தோல்விகளால் சில ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்து வந்தார். அப்போது பிக்பாஸ் […]
%d bloggers like this: