நடிகை “அமலா பால்” பிரபல பாடகரை காதலிக்கிறாரா? புகைப்படங்கள் வைரல்..!!

அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் உடையில்லாமல் நடித்து அனைவரையும் அதிர வைத்தார் அமலா பால். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது தன் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளதாக அமலா தெரிவித்தார். மேலும் அந்த உண்மை காதல் தன் காயங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளதாகவும், காதலர் தன்னை மிகவும் புரிந்து கொண்டுள்ளார் என்றும், ஆனால் அவர் யார் என்பதை தற்போது சொல்ல முடியாது என்றும் கூறினார் அமலா. இந்நிலையில் தான் அந்த காதலர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை காதலிப்பதாக கூறப்படுகிறது. அமலா புர்கா அணிந்து பவ்னிந்தருடன் வெளியே சென்றபோதுது எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு புகைப்படத்தில் பவ்னிந்தர் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்தபடி உள்ளார். அந்த பெண்ணின் முகம் தெரியவில்லை. இருப்பினும் அது அமலா தான் என்று சந்தேகிக்கப்படுகிறது.அமலாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பவ்னிந்தர் சிங் சிறிது நேரத்தில் அவற்றை நீக்கிவிட்டார். பவ்னிந்தர் ஈஸ்டர் பண்டிகையை அமலாவுடன் சேர்ந்து கேரளாவில் கொண்டாடியிருக்கிறார்.

அமலாவும், பவ்னிந்தரும் திருமணம் ஆகாமலேயே லிவ் இன் முறைப்படி வாழ்வதாக கூறப்படுகிறது. தாயை போன்று அன்பு வைக்கும் காதலர் கிடைத்துள்ளார் என்று அமலா முன்பு கூறியது பவ்னிந்தரை தான் என்று பேசப்படுகிறது.

முன்னாக தெய்வத் திருமகள் படத்தில் நடித்தபோது அமலாவுக்கும், இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும் இடையே காதல் ஏற்பட்டு 2014ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. ஆனால் 2017ம் ஆண்டு அவர்கள் பிரிந்துவிட்டனர். விஜய், அமலா பால் பிரிய தனுஷ் தான் காரணம் என்று விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன் அண்மையில் தெரிவித்தார். அதை அமலா பால் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம்.. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை... ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு!

Thu Mar 12 , 2020
முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம், என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நான் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார். முதல்வர் பதவி எனக்கு வேண்டாம், என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். நீண்ட ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய […]
%d bloggers like this: