குட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..!! என்ன ட்ரெஸ் இது?

அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இது கோலம் என கேட்டுள்ளனர். அமலாபால் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். காரணம் அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த உடைதான். இப்படி ஒரு உடையுடன் நீங்கள் தெருவில் நடக்கிறீர்களா? மும்பை காரியாவே மாறிட்டீங்களா என பலர் கேள்வியால் துளைத்துள்ளனர். வழக்கம்போல ரசிகர்களின் எந்த கேள்வியையும் கண்டுகொள்ளாமல் ஜாலியாக இருக்கிறார் அமலாபால். மும்பையில் சாலை ஓரத்தில் நடந்து செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிகிறது.

இந்த ஃபோட்டோவுக்கு கீழ் வழக்கம் போல அழகு, க்யூட், சூப்பர் என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். சிலரோ அமலா பால் குழந்தை போல் உடையணிந்திருப்பதாக கூறியுள்ளனர். மும்பைக்கு சென்றது மும்பை வாழ் பெண்ணாகவே மாறிவிட்டார் போல அமலாபால். அமலாபாலின் இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏன் இதுபோன்ற உடைகளை அணிந்து தெருவில் நடக்கிறீர்கள். அப்படியும் புகைப்படமெடுத்து பொதுவெளியில் பகிர்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளனர்.

ஆடை படத்தில் ஆடையின்றி நடித்தபோதே அமலாபால் மீது விமர்சனம் எழுந்தது. சிலர் அவரை கடுமையாக விமர்சித்து எழுதினார்கள். இன்னும் சிலரோ அமலாபால் துணிச்சல் காரர், அவரது துணிகரம் எல்லா பெண்களுக்கும் வேண்டும் எனவும், தன் விருப்பப்படி வாழ அவருக்கு உரிமை இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவை போல படம் ரிலீஸ் தேதி அறிவிப்பதும், பின் வாங்குவதுமாக இருந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் அமலாபால். கடைசியாக அவரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ராட்சசன். சென்ற வருடத்தில் ஆடை படத்தில் துணிச்சலாக உடையின்றி சில காட்சிகளில் நடித்திருந்தார் அமலாபால். தற்போது மலையாளத்தில் ஆடுஜீவிதம் எனும் படத்திலும், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.


Advertisements

Next Post

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த அப்டேட்: ஹீரோயின் யார் தெரியுமா?

Sun Mar 15 , 2020
தமிழ் சினிமாவில் முதலில் இசையமைப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமானது. இந்நிலையில் தற்போது அவரின் புதிய படம் ஒன்றிற்கு பூஜை போட்டுள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு […]
%d bloggers like this: