அடர்ந்த காட்டில் தனிமையில், சிக்கிக்கொண்ட அமலா பால்… ரகசியம் உடைக்கிறார் ‘அதோ அந்த பறவை போல’பட இயக்குனர்..!

அடர்ந்த காடு. அதுக்குள்ள மாட்டிக்கிற அமலா பால், எப்படி அதுல இருந்து வெளிய வர்றாங்க அப்படிங்கறது படம். ஓர் ஆண் காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டா வந்திரலாம்னு சொல்வாங்க. ஆனா ஒரு பெண் மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாங்கறதை விறுவிறுப்பா சொல்றோம். இது ரெண்டே நாள்ல நடக்கிற கதை’ என்கிறார், ‘அதோ அந்த பறவைப் போல’ படத்தின் இயக்குனர் கே. ஆர். வினோத். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவிடமும் அதற்கு முன் இயக்குனர் கிச்சாவிடமும் சினிமா கற்றவர். ‘அதோ அந்த பறவைப் போல’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தக் கதைக்கு அமலா பாலை எப்படி தேர்வு பண்ணுனீங்க..? அமலா பால் காட்டுக்குள்ள டிரெக்கிங் போவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன். அதனால இந்த கதை அவங்களுக்குப் பொருத்தமா இருக்கும்னு முடிவு பண்ணிச் சொன்னோம். டைரட்டர் அருணும் நானும் அவங்ககிட்ட கதை சொன்னதும் பிடிச்சுப்போச்சு. கதையோட அவங்களை கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது. கண்டிப்பா பண்றேன்னு சொன்னாங்க. பொதுவா ஹாலிவுட்ல, இந்த மாதிரி அட்வெஞ்சர் படங்கள் வர்றது உண்டு. தமிழ்ல குறைவுன்னு அவங்களே சொன்னாங்க. காட்டுல ஷூட்டிங்னா அதிகமான கெடுபிடி இருக்குமே? கண்டிப்பா. முதல்லயே பர்மிஷன் வாங்கிட்டோம். தலக்கோணம் காட்டுலதான் ஷூட்டிங். காட்டுக்குள்ள இதை பண்ணணும், இது இதை பண்ணக் கூடாதுன்னு ஒரு லிஸ்ட் இருக்கு. அதை எழுதிக் கொடுத்தோம். அவங்க சொன்னபடியே கேட்டு ஷூட் பண்ணினோம். பாரஸ்ட் அதிகாரிகள் மூணு நாலு பேர் எங்களோட இருந்து கவனிச்சாங்க. அப்படித்தான் பண்ணினோம். ஆனாலும் நடிகை அமலா பால்-ல இருந்து மொத்த டீமும் கடுமையா உழைச்சிருக்காங்க. அதனாலதான், சொன்ன நாட்களை விட குறைவான நாட்கள்லயே படத்தை முடிக்க முடிஞ்சது.

அமலா பால், சண்டைக்காட்சிகள்ல நடிச்சிருக்கிறதா சொன்னாங்களே? கதைப்படி கொஞ்சம் அதிகமாவே ஆக்‌ஷன் காட்சிகள்ல நடிச்சிருக்காங்க. இதுக்காக, கிரவ் மகா (Krav Maha)ங்கற இஸ்ரேல் தற்காப்பு கலை பயிற்சியை அவருக்கு கொடுத்தோம். ஶ்ரீராம் மாஸ்டர் இதுக்கான பயிற்சிக் கொடுத்தார். 3 மாசம் இந்த டிரெயினிங் எடுத்தாங்க அமலா பால். அவங்களோட உழைப்பு ஆச்சரியமா இருந்தது. 60 அடி உயர மரத்துல இருந்து குதிச்சாங்களாமே? இல்ல, இறங்குனாங்க. மரத்துல இருந்து வேகமா கீழே இறங்கணும், சேத்துல உருளணும்னு முதல்லயே சொல்லிட்டோம். இது எதுலயும் டூப் போடாம நடிக்க சம்மதிச்சாங்க. ஒரிஜினலாவே பண்ணினாங்க. 60 அடி மரத்துல இருந்து சரசரன்னு அவங்க இறங்குனதைப் பார்க்க எங்களுக்கே ஆச்சரியமா போச்சு. அந்தக் காட்சியை ஒரே டேக்ல எடுத்தோம். ரொம்ப சிறப்பா பண்ணினாங்க. அதே மாதிரி நிஜ சேத்துக்குள்ள விழுந்து புரள்ற காட்சியில, கொஞ்சம் கூட முகம் சுளிக்காம பண்ணியிருக்காங்க. இதே மாதிரி நிறைய ரிஸ்கான காட்சிகள்ல நடிச்சிருக்காங்க. அது எல்லாத்தையும் சொன்னா சுவாரஸ்யம் போயிரும்.

படத்துல ஹீரோன்னு யாருமில்லையா? கதைதான் ஹீரோ. அதோட அமலாபாலையும் ஹீரோன்னு சொல்லலாம். ஒரு ஹீரோவுக்கு இணையா என்னலாம் பண்ணனுமோ, அதைலாம் பண்ணியிருக்காங்க அமலா பால். இவங்களைத் தவிர பாரஸ்ட் அதிகாரி ஆசிஷ் வித்யார்த்தி, கிரிக்கெட் வர்ணனையாளர் சதீஷ் கோச்சார், 10 வயசு சிறுவன் பிரவீன்… இவங்களை சுத்திதான் கதை நடக்குது. குறைவான நாள்ல ஷூட்டிங் பண்ணியிருக்கோம்னு சொன்னீங்களே, எப்படி? முதல்ல நாங்க பிளான் போட்ட நாட்களை விட, வேகமாக எல்லா வேலைகளும் முடிஞ்சது. இதுக்கு மொத்த டீமுக்கும் நன்றி சொல்லணும். ஸ்கிரிப்ட்ல என்ன எழுதியிருந்தோமோ, அதை மட்டும்தான் ஷூட் பண்ணினோம். அதைதாண்டி ஸ்பாட்ல போயி, இதை மாத்தலாம், அதை மாத்தலாம்ங்கற வேலையே இல்லை. அதனாலதான் முடிஞ்சுது. இதுக்கு, எங்க தயாரிப்பாளர், டைரட்டர் அருண் ராஜகோபாலன், இசை அமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், கேமராமேன் சாந்தகுமார் உட்பட மொத்த டீமுக்கும் நன்றி சொல்லணும்.

Advertisements

Next Post

சூர்யா40 லேட்டஸ்ட் அப்டேட்.. மீண்டும் நாவல் கதையை எடுக்கும் வெற்றிமாறன்..!

Mon Dec 30 , 2019
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தின் மூலக்கதை எடுக்கப்பட்ட நாவல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்து அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் அசுரன். இப்படத்தில் கென் கருனாஸ், டீஜே அருணாசலம், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, இயக்குனர் பாலஜி சக்திவேல், வேல்ராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி […]

Actress HD Images

Advertisements