கருப்பு நிற உடையில் கையில் குழந்தை அருகில் செல்ல நாய்… என நடிகை “எமி ஜாக்சன்” ஸ்பெஷல் ஃபோட்டோ…

கடந்த 2019 ஆம் வருடம், என்னவொரு சிறந்த வருடம் என ஆச்சரியமாகத் தெரிவித்துள்ளார் நடிகை எமி ஜாக்சன். ஆர்யாவின் மதராசப்பட்டினம், விக்ரமின் தாண்டவம், தனுஷின் தங்க மகன், விக்ரமின் ஐ, ரஜினிகாந்தின் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். பின்னர் கர்ப்பிணி எமிக்கும், அவரது காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் வீடியோ வெளியாகின. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என்று பெயர் வைத்த எமியும் அவர் காதலரும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. பின்னர், பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில் குழந்தைக்கு போட்டோஷூட் நடத்தி பிரமிக்க வைத்தனர். இந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஸ்பெஷல் ஃபோட்டோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

அதில் கையில் குழந்தை, அருகில் செல்ல நாயுடனும் இருக்கிறார் எமி ஜாக்சன். எல்லோரும் கருப்பு உடையில் இருக்கிறார்கள். கேப்ஷனாக, கடந்த வருடம் என்ன ஓர் ஆச்சரியமான வருஷம் என வியந்து எழுதியுள்ளார். அவர் கர்ப்பமானது, குழந்தை பெற்றது ஆகியவற்றை குறிப்பிட்டு இவ்வாறு அவர் எழுதியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisements

Next Post

சன் டிவி முன்னணி சீரியல் நடிகை ஸ்ரீத்திகாவு-க்கு கேரளாவில் திருமணம் முடிந்தது...

Thu Jan 2 , 2020
முன்னணி சீரியல் நடிகை ஸ்ரீத்திகா – ஷானீஷ் திருமணம் டிசம்பர் 30-ம் தேதி கேரளாவில் நடைபெற்றுள்ளது. 2002-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீத்திகா ஸ்ரீ. அந்தச் சீரியல் அவரைத் தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் வரிசையில் முக்கியமானவராக வலம்வர வைத்தது. ‘மெட்டி ஒலி’ சீரியலைத் தொடர்ந்து ‘கலசம்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘நாதஸ்வரம்’, ‘மாமியார் தேவை’, ‘உயிர்மை’, ‘குலதெய்வம்’, ‘கல்யாண பரிசு’ என பல்வேறு […]

Actress HD Images

%d bloggers like this: