மிகக் கொடூர வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்..!!

அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் அந்தாதுன். வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முடிவடைந்திருக்கும் நிலையில் பிப்ரவரி மாதத்திலிருந்து படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தாதுன் திரைப்படத்தில் தபு கதாபாத்திரத்துக்கு கதையில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். கதைப்படி ஒரு மாடர்ன் பணக்கார நடுத்தர வயதுப் பெண்ணாக தோன்றியிருக்கும் தபுவின் கதாபாத்திரம், தான் வாழ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்காத கொடூர வில்லியாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படக்குழு, படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் , நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Next Post

ஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்....ஆங்கில நாளிதழ்க்கு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.... வாயடைத்து போன ரசிகர்கள்..!!

Fri Jan 24 , 2020
பிரபல நாளிதழ் ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் பல ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தவர் தான் ஜஸ்வர்யா. பின் திரைப்பட வாய்ப்புக்கள் கிடைத்து சினிமாவிற்குள் வந்தார்.தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் ஜஸ்வர்யா ராஜேஷ். தமிழ் பெண்மணியான ஜஸ்வர்யா வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். நீதானா அவன் என்ற படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஜஸ்வர்யா ராஜேஷ். இதன் […]
%d bloggers like this: