மீண்டும் இணைந்த “தனுஷ்” மற்றும் “அனிருத்”..!

கடந்த சில ஆண்டுகளாக அனிருத் மட்டும் தனுஷ் இணையாத காரணத்தினால் வேலையில்லா பட்டதாரி மற்றும் மாரி ஆகிய படங்களில் கேட்ட பாடல்களை ரசிகர்கள் கேட்க முடியாத நிலை உள்ளது. இதனால் மீண்டும் அனிருத் மற்றும் தனுஷ் எப்போது இணைவார்கள் என இரு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனை அடுத்து சமீபத்தில் பேட்டியளித்த அனிருத் மீண்டும் தனுஷுடன் இணைந்து பணிபுரிவேன் என்று கூறியது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இதன் முதல் கட்டமாக தற்போது தனுஷ் நடித்த படம் ஒன்றுக்கு அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இதனை அடுத்து விரைவில் அவர் தனுஷ் படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் இந்த பாடல் வரும் 25-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

விளையாட்டு வினையாக முடிந்த சோகம்.." ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம்..!

Tue Dec 24 , 2019
சென்னை அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு 7 வயதில் கீர்த்திவாசன் என்ற மகன் உள்ளான். தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த கீர்த்திவாசன், நேற்று முன்தினம் தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக ஊஞ்சலில் கட்டப்பட்டிருந்த கயிறு, சிறுவனின் கழுத்தில் சிக்கி இறுக்கிக்கொண்டது. அதில் இருந்து மீண்டு வர, சிறுவன் நீண்ட நேரம் முயற்சி செய்து, இறுதியில் மயக்கம் அடைந்தான். இதனைக்கண்டு அதிர்ந்த […]
%d bloggers like this: