ஏ.ஆர்.முருகதாஸ் ‘சந்திரமுகி 2’ தொடங்க திட்டம்…முந்திக்கொண்ட சந்திரமுகி பட இயக்குனர்..

ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு இருந்த ‘சந்திரமுகி 2’ யோசனையைத் தெரிவித்திருக்கும் வேளையில், பி.வாசு அதன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது

இதனிடையே, ’தர்பார்’ படம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில், “’சந்திரமுகி’ படத்தின் வேட்டையன் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். வேட்டையன் மற்றும் டாக்டர் சரவணன் கதாபாத்திரத்தைச் சுற்றி நிகழ்வது போன்ற ஒரு கதையை உருவாக்கலாமா என்று ரஜினி சாரிடம் கேட்டேன். அந்த யோசனை அவருக்குப் பிடித்துப் போகவே சரி என்று சொன்னார்” என்று தெரிவித்தார். மேலும், பலரிடம் பேசி அனுமதி வாங்கவுள்ளதால் அந்த முடிவை இருவரும் கைவிட்டு விட்டதாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தத் தகவல் வெளியான நேரத்தில் ‘சந்திரமுகி 2’ குறித்த தனது திட்டத்தை அறிவித்துள்ளார் பி.வாசு. ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகமாகத்தான் ‘ஆப்த ரட்சகா’ படத்தை கன்னடத்தில் இயக்கியிருந்தார் பி.வாசு. அதைத் தமிழில் கொஞ்சம் மாற்றி ஒரு முன்னணி நாயகனிடம், பெரிய தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லியிருப்பதாகவும் பி.வாசு தெரிவித்துள்ளார். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பி.வாசு குறிப்பிட்டுள்ளார்.’சந்திரமுகி 2′ குறித்த தனது யோசனையை ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்த வேளையில், முந்திக் கொண்டு பி.வாசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

அஜித்திடம் கற்ற பெரிய பாடம்: ரசிகர்களை சந்தித்து பேசிய பிரபல மலையாள நடிகர்..

Wed Jan 1 , 2020
அஜித்திடம் கற்ற பெரிய பாடம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடம் கலந்துரையாடும்போது ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். லால் ஜுனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாளப் படம் ‘டிரைவிங் லைசன்ஸ்’. நடிகருக்கும் அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே இந்தப் படம். இதனை விளம்பரப்படுத்த தன் ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடையக் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ப்ரித்விராஜ். இந்த நிகழ்வில் ரசிகர் ஒருவர் அஜித் […]
%d bloggers like this: