மாநாடு படத்தில் சிம்புவுடன் மோதல் ?மீண்டும் வில்லனாக அரவிந்த் சுவாமி…!

சிம்பு நடிப்பில் மீண்டும் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் அரவிந்த் சுவாமி. ஒருவழியாக சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முன்னை விட மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷனை அடுத்து இப்போது நடிகர் அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சுதீப் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். இப்போது அரவிந்த் சாமி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மாநாடு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தனி ஒருவன், போகன், செக்க சிவந்த வானம் ஆகிய படங்களுக்கு பிறகு அரவிந்த் சுவாமி மீண்டும் வில்லனாக நடிக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Advertisements

Next Post

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்‘சைக்கோ’ படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ்..!

Wed Jan 8 , 2020
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘சைக்கோ’ திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘சைக்கோ’. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும், முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் ராம் நடிக்கிறாராம். இதனை ‘டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் […]

Actress HD Images

%d bloggers like this: