ஈழத்து பட்டாம்பூச்சி “லாஸ்லியா”வின் முதல் படத்தில் இணைந்த ஆக்சன் கிங்…

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான ஹர்பஜன்சிங் முதன்முதலாக தமிழில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் டைட்டில் பிரண்ட்ஷிப் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கிறாரா? அல்லது முக்கிய கேரக்டரில் நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் இந்தப் படத்தை ஜேபிஆர்பி ஸ்டாலின் என்பவர் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

பிகினியில் ஒய்யார போஸ் கொடுத்த மீரா மிதுன்... இதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்.... விளாசி தள்ளிய நெட்டிசன்ஸ்...!

Tue Feb 18 , 2020
மீரா மிதுன் வெளியிட்டுள்ள அரைகுறை உடை புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசித் தள்ளியுள்ளனர். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் மும்பையில் செட்டில் ஆனதில் இருந்து அவர் உடலில் உடை நிற்பதே இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மீரா தனது அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மீரா […]
%d bloggers like this: