சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்..!!

4-வது குஞ்சலி மரைக்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படத்தில் நடிகர் அர்ஜுன் போர்வீரனாக நடிக்கிறார். 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர்.
ரூ.100 கோடி செலவில் தயாராகிறது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அர்ஜுனின் தோற்றம் அடங்கிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜுன், அனந்தன் எனும் போர்வீரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

Next Post

நடிகர் அரவிந்த் சுவாமி-க்கு இவ்வளவு அழகான மனைவி குழந்தையா?வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

Fri Jan 24 , 2020
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக விளங்குபவர் அரவிந்தசாமி.90களில் முன்னணி நடிகராக விளங்கியவர் தற்போது தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு சூப்பர் அந்தஸ்தை பெற்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகின்றார். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பில் […]
%d bloggers like this: