“ஆர்யா சாயிஷா” தம்பதியின் சந்தோசமான அறிவிப்பு- ரசிகர்கள் குஷி..!

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்தார்கள் என்பதும் இந்த புதுமண தம்பதிகள் இணைந்து ’டெடி’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனையடுத்து படக்குழுவினரும் இதனை கொண்டாடினார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக ஆர்யா மற்றும் சாயிசா இணைந்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அவர்களது ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ஆர்யா மற்றும் சாயிஷா ஏற்கனவே சூர்யாவின் ’காப்பான்’ படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் முதன்முதலாக ஜோடியாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் பிப்ரவரியில் காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இதனையடுத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் அடுத்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisements

fogpriya

Next Post

இயக்குனர் 'சிம்புதேவன்' படத்தில் 3 நாயகிகள்..!

Tue Dec 10 , 2019
விஜய் நடித்த ’புலி’ படத்தை இயக்கிய சிம்புதேவன் தற்போது ’கசடதபற’ என்ற படத்தை இயக்கி வருகிறார். வெங்கட்பிரபு தயாரித்து வரும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சாந்தனு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதுஏற்கனவே இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் ரெஜினா ஆகிய இருவர் […]

Actress HD Images

Advertisements