‘அசுரன்’ திரைப்படத்துக்கு அசுரத்தமான சாதனை அமேசானில் மற்றொரு சாதனை !

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ‘அசுரன்’ திரைப்படம்  கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தை தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, டிஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து அமேசான் கிண்டில் தளத்தில் வெக்கை நாவல் இந்திய மொழிகளில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகங்களின் முதலிடம் பிடித்து சாதனை பரிந்துள்ளது.

மேலும் இந்த செய்தி அறிவிக்கப்பட்ட நாளில் இருங்து பலரும் வெக்கை நாவலைத் தேடிப் படிக்க ஆரம்பித்தனர். அந்த நாவல் அமேஸானில் கிண்டில் வடிவத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அமேசான் நிறுவனம், 2019 ஆம் ஆண்டில் அதிகமாக வாங்கப்பட்ட நாவல் வெக்கைதான் என அறிவித்துள்ளது.

Advertisements

Next Post

நாங்க அங்கே வரமாட்டோம்.. நாங்க சந்தோஷமா இருக்கோம்.. ரொம்ப சுதந்திரமாக இருக்கோம்... "நித்யானந்தா" பெண் சீடர்கள் பிடிவாதம்..!!

Sat Dec 28 , 2019
“நாங்க சந்தோஷமா இருக்கோம்.. ரொம்ப சுதந்திரமாக இருக்கோம்.. அப்பாவால்தான் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை” என்று நித்யானந்தாவின் பெண் சீடர்கள் 2 பேர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதியிடம் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு தங்கியிருந்த தன்னுடைய 2 மகள்களையும் மீட்டுதர வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் தந்தார். […]

You May Like

%d bloggers like this: