நேற்று திருமணம் செய்து கொண்ட 75 வயது நடிகர்… இன்று மருத்துவமனையில் அனுமதி..!!

வங்கமொழி திரையுலகில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல நடிகர் திபாங்கர் தே மற்றும் நடிகை டோலோன் ராய் ஆகிய இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டனர். 75 வயதான திபாங்கர் தே மற்றும் 49 வயதான டோலோன் ஆகிய இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீண்ட காலமாக இருவரும் லிவிங் டூ கெதர் உறவில் இருந்தாலும், இருவருமே அதனை மறுத்தது இல்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர். தற்போது வரை இருவருமே பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று திடீரென திபாங்கர் தே மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு திருமணம் நடந்த நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரின் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

உலகிலேயே முதன்முறையாக மாற்றுத் திறனாளியை மேடையேற்றும் கோடீஸ்வரி..!

Sat Jan 18 , 2020
கலர்ஸ் ஒவ்வொரு வாரமும் வாழ்க்கையை சவால்களோடு எதிர்கொண்டு வரும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்தை வீசும். ஆனால் வரும் வாரம் ஒரு படி மேலே சென்று உலக தொலைக்காட்சிகள் நிகழ்த்திராத சாதனையைச் செய்துள்ளது. அதாவது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கௌசல்யா என்ற பெண்ணை நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்துள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சியில் வாய் பேசாத, காதுகேளாதவர்களை பங்கேற்கச் செய்து சிறப்பிப்பது […]
%d bloggers like this: