நான் பெண்களை அவதூறாக பேசவில்லை..! – பாக்யராஜ் விளக்கம்..!

பெண்கள் பற்றி பாக்யராஜ் அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் பாக்யராஜ்.

சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் ”பொள்ளாச்சி பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல! எச்சரிக்கையாக இல்லாத அந்த பெண்களும் காரணம்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சில பெண்கள் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

இந்நிலையில் தான் பேசியது குறித்து விளக்கமளித்த பாக்யராஜ் “நான் பெண்களை இழிவுப்படுத்த அவ்வாறு பேசவில்லை. நான் பெண்களை மிகவும் மதிக்கிறேன். பொள்ளாச்சி சம்பவத்தின் வீடியோ காட்சிகளில் பெண்கள் கதறியதை கேட்டபோது ஒரு தந்தையாக நான் மனமுடைந்து போனேன். செல்போனால் பெண்களுக்கு நிறைய கேடுகள் வருகிறது. பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் அப்படி பேசினேன்” என கூறியுள்ளார்

Advertisements

fogpriya

Next Post

"டகால்டி" டீஸர் அப்டேட் கொடுத்த சந்தானம்..!

Mon Dec 2 , 2019
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் டகால்டி படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகிறது. டகால்டி டீஸர் 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனது ரசிகர்களை அவ்வளவு நேரம் காக்க வைக்க விரும்பவில்லை, அதற்கு முன்பே டீஸர் வெளியாகும் என்ற அறிவிப்பை சந்தானம் வெளியிட்டுள்ளார். காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் தற்போது, ஹீரோவாக ஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் காமெடியிலும் கலக்கி வருகிறார். ஷங்கரின் உதவி இயக்குநரான […]
%d bloggers like this: